DRDO RAC ASL வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.31,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தின் முதன்மை ஆய்வகமான ஹைதராபாத்தில் உள்ள மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகம் (ஏஎஸ்எல்) ஆனது Junior Research Fellows (JRFs) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DRDO RAC ASL |
பணியின் பெயர் | Junior Research Fellows (JRFs) |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 21 Days |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DRDO RAC காலிப்பணியிடங்கள்:
- Mechanical Engineering (ME) – 8 பணியிடங்கள்
- Electrical & Electronics Engineering (EEE)/ Electronics & Communication Engineering (ECE) – 5 பணியிடங்கள்
என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் இருந்து B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
JRF வயது வரம்பு:
விளம்பரத்தின் இறுதி தேதியின்படி, அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள். SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் மற்றும் OBC க்கு 3 ஆண்டுகள் வரை அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
RITES நிறுவனத்தில் மாதம் ரூ.2,10,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.