DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 20 காலிப்பணியிடங்கள்..!

0

DRDO நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 20 காலிப்பணியிடங்கள்..!

பாதுகாப்பு R & D அமைப்பில் (DRDO) காலியாக உள்ள Graduate Apprenticeship Trainee பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் மூலம் தேவையான தகவல்களை அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence R & D Organization (DRDO), Ministry of Defence
பணியின் பெயர் Graduate Apprenticeship Trainee
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

பாதுகாப்பு R & D அமைப்பு பணியிடங்கள்:

Graduate Apprenticeship Trainee பணிக்கு என 20 பணியிடங்கள் பாதுகாப்பு R & D அமைப்பில் (DRDO) காலியாக உள்ளது.

Graduate Apprenticeship Trainee கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech போன்ற Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இதற்கு முன் Apprenticeship Training செல்லாதவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இதற்கு முன் இப்பணிகளில் பணிபுரிந்த அனுபவம் இல்லாதவராக இருப்பதும் அவசியமானது ஆகும்.

Graduate Apprenticeship Trainee வயது வரம்பு:

Graduate Apprenticeship Trainee பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

DRDO ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.9,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

DRDO தேர்வு முறை:

Graduate Apprenticeship Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Degree Mark மூலம் Short List செய்யப்பட்டு பின் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 22.05.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

DRDO Notification Link

DRDO Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!