DRDO வேலைவாய்ப்பு 2022 – டிகிரி, டிப்ளமோ தேர்ச்சி போதும்! விண்ணப்பிப்பது எப்படி?

0
DRDO வேலைவாய்ப்பு 2022 - டிகிரி, டிப்ளமோ தேர்ச்சி போதும்! விண்ணப்பிப்பது எப்படி?
DRDO வேலைவாய்ப்பு 2022 - டிகிரி, டிப்ளமோ தேர்ச்சி போதும்! விண்ணப்பிப்பது எப்படி?
DRDO வேலைவாய்ப்பு 2022 – டிகிரி, டிப்ளமோ தேர்ச்சி போதும்! விண்ணப்பிப்பது எப்படி?

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 17 காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் மார்ச் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வேலைவாய்ப்பு :

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது கிராஜுவேட் அப்ரண்டிஸ் பதவியில் 8 காலிப்பணியிடங்களும், டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடத்தில் 9 காலியிடங்கள் என மொத்தம் 17 பணியிடங்கள் உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் உணவுத் தொழில்நுட்பம் அல்லது உணவு பதப்படுத்துதலில் B.TECH அல்லது உணவு அறிவியலில் B.SC முடித்திருக்க வேண்டும். இந்த கல்வி தகுதியின் கீழ் 4 பணியிடங்கள் உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!

மேலும் B.TECH பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், பயோ இன்ஜினியரிங் அல்லது பயோமெடிக்கல் இன்ஜினியரிங்) பிரிவில் 2 பணியிடங்கள் உள்ளது. B.TECH அல்லது B .E கெமிக்கல் இன்ஜினியரிங், பாலிமர் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அல்லது பாலிமர் சயின்ஸ் படித்தவர்களுக்கு 2 காலியிடங்கள் உள்ளது. மேலும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவிற்கு 3 காலியிடங்ளும் உள்ளது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அல்லது கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ பிரிவில் 2 காலியிடங்கள் உள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர் 2021ம் ஆண்டு தேர்ச்சி பெற்று MHRDNATS போர்ட்டலில் பதிவு செய்து உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்கும் நபர் பணியில் முன் அனுபவம், பயிற்சி பெற்றிருத்தல் கூடாது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 8,000 – 9000 வரை ஊதியம் வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு rac.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மார்ச் 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகலை எதிர்கால குறிப்புக்காக வைத்திருப்பது அவசியம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!