இனி ஜாக்பாட் தான்.. அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

0
இனி ஜாக்பாட் தான்
இனி ஜாக்பாட் தான்
இனி ஜாக்பாட் தான்.. அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய காலை நேர நிலவரப்படி அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை:

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை பொறுத்து இந்தியாவிற்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் மற்றும் இதர முதலீடுகளை விட தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதனால் அதிகமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட தங்கத்தின் மதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் முதல் ஆபரணத் தங்கத்தின் விலையில், ஏற்ற இறக்கங்கள் இருந்து வரும் நிலையில், நேற்றைய நிலவரப்படி காலையில், சற்று விலை அதிகரித்து சவரன் ரூ.37,120-க்கும், மாலையில் ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். ஆனால், இன்று காலை நேரத்தில் மீண்டும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

நாட்டில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Exams Daily Mobile App Download

அதன்படி, இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,620 ஆக உள்ளது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.61,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!