அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்.. இனி FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாலி தான்!

0
அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்.. இனி FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாலி தான்!
அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்.. இனி FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாலி தான்!
அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்.. இனி FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஜாலி தான்!

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் தற்போது உயர்த்தப்பட்ட ரெப்போ வட்டி விகிதத்தினால் தங்களது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதிலும், குறிப்பாக வைப்பு நிதி திட்டங்களில் சேர்ந்துள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க உள்ளது.

வட்டி விகிதம்:

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெரும் கடன்களுக்கு விதிக்கப்படுவது தான் ரெப்போ வட்டி ஆகும். சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதம் 5.90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கி செலுத்த வேண்டிய வட்டி அதிகரிக்கப்படுவதால், பொதுமக்கள் வாங்கிய கடன்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்துகின்றன. இதனால் வீட்டு கடன், தனி நபர் கடன், வாகன கடன் போன்றவற்றின் வட்டியும், மாத தவணையும் அதிகமாக்கப்படுகின்றது.

மேலும், தங்கள் வங்கியில் வைப்பு நிதி திட்டத்தில் உள்ளவர்களுக்கான வட்டியும் அதிகரித்து வழங்கப்படும். அந்த வகையில் கனரா வங்கி தனது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் உள்ளவர்களுக்கு மாற்றப்பட்ட வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட வட்டியானது அக்டோபர் 7ம் தேதி முதல் அமலாகியுள்ளது. அதன்படி, 5 வருடம் முதல் 10 வருடம் வரையிலான திட்டத்திற்கு 7% வட்டியும், 3 வருடம் முதல் 5 வருடம் வரையிலான திட்டத்திற்கு 6.50% வட்டியும் வழங்கப்படுகின்றது.

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை அறிக்கை! உஷார் மக்களே!

Exams Daily Mobile App Download

மேலும், 2 வருடம் முதல் 3 வருடம் வரையில் 6.50 % வட்டியும், 666 நாட்கள் கொண்ட திட்டத்தில் 7% வட்டியும், 1 வருடம் முதல் 2 வருடம் வரை 6.50 % வட்டியும் வழங்கப்படுகின்றது. மிகவும் குறைந்த நாட்களாக உள்ள 7 நாள் முதல் 45 நாள் வரையினாலான திட்டத்திற்கு 3.25% வட்டியும் வழங்கப்படுகின்றது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தை கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனித்து பயனடையும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!