சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உச்சம் தொட்டு வரும் இந்த சூழலில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு:
உக்ரைன்- ரஷ்யா போருக்கு பின், கடந்த சில நாட்களாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. மேலும் கடந்த ஜூன் மாத மத்தியில் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த அடுத்த நாட்களில் தங்க விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது. பொதுவாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இதை அறிந்த மக்கள் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்து வருகிறார்கள். தற்போது சரிந்து வரும் பங்குச் சந்தைகள் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். மேலும் தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதால், தமிழ்நாட்டு பெண்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதற்கு முக்கிய காரணம், சிக்கலின் போது நமக்கு தங்க நகைகள் தான் கைகொடுக்கும் என்பதுதான்.
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – கூட்டுறவு துறை அதிரடி
இருப்பினும் இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.4815-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.40 காசுகள் உயர்ந்து, ரூ.63.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.