வேலை நாட்கள் அதிரடியாக குறைப்பு – எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி! அரசின் முக்கிய முடிவு!

0
வேலை நாட்கள் அதிரடியாக குறைப்பு - எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி! அரசின் முக்கிய முடிவு!
வேலை நாட்கள் அதிரடியாக குறைப்பு - எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி! அரசின் முக்கிய முடிவு!
வேலை நாட்கள் அதிரடியாக குறைப்பு – எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி! அரசின் முக்கிய முடிவு!

எரிபொருளைச் சேமிப்பதற்காக ஒரு வாரத்தில் வேலை நாட்களைக் குறைப்பது குறித்து பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருவதாக செய்தி ஊடகம் ஒன்று நேற்று தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

வேலைநாட்கள் குறைவு:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், எண்ணெய் நுகர்வு மற்றும் இறக்குமதி செலவு அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 2.7 பில்லியன் டாலர்கள் வரையிலான வருடாந்திர அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் வகையில், ஒரு வாரத்தில் வேலை நாட்களைக் குறைப்பது குறித்து பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது. 1.5 பில்லியன் டாலர் முதல் 2.7 பில்லியன் வரையிலான அந்நியச் செலாவணியைச் சேமிக்க பாகிஸ்தானின் ஸ்டேட் பாங்க் தயாரித்த வேலை நாட்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மூன்று நிலைகளில் அரசின் வேலை நாள் குறைப்பு திட்டம் வடிவமைக்கப்படுகிறது. முதல் நிலையில், நான்கு வேலை நாட்கள் மற்றும் மூன்று விடுமுறை நாட்கள் என இருக்குமாறு திட்டமிடப்படுகிறது. இதில் வார இறுதி நாட்களில் சில்லறை விற்பனை அனுமதிக்கப்படும். இதனால் வருடத்திற்கு $1.5bn வரை சேர்க்கப்படுகிறது. இரண்டாவது நிலையில், நான்கு வேலை நாட்கள், இரண்டு விடுமுறை நாட்கள் மற்றும் ஒரு நாள் லாக்டவுன் (சில்லறை விற்பனை ஒரு நாள் மூடப்படும்) என திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு $2.1bn வரை சேர்க்கப்படுகிறது.

மூன்றாவது நிலையில், நான்கு வேலை நாட்கள், ஒரு விடுமுறை மற்றும் இரண்டு நாட்கள் லாக்டவுன் (வணிக நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு முடக்கப்படும்) என திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலை மிகவும் கடுமையானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது பொதுமக்களின் வாழ்க்கையை அதிக அளவில் பாதிக்கும் என்று கருத்துக்கள் வருகிறது. புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் குறைக்கப்பட்ட வேலை நாட்களைக் குறைத்து, வணிக நடவடிக்கைகளை பகல் நேரமாக மாற்றி 5000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை சேமிப்பதன் மூலம், தேசிய ஆற்றல் சேமிப்பு இயக்கத்தை தொடங்குமாறு மின் பிரிவு அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here