உங்களது E-PAN கார்டை வீட்டில் இருந்தப்படியே சுலபமாக பெறலாம் – எளிய வழிமுறைகள் இதோ!!

0
உங்களது E-PAN கார்டை வீட்டில் இருந்தப்படியே சுலபமாக பெறலாம் - எளிய வழிமுறைகள் இதோ!!
உங்களது E-PAN கார்டை வீட்டில் இருந்தப்படியே சுலபமாக பெறலாம் - எளிய வழிமுறைகள் இதோ!!
உங்களது E-PAN கார்டை வீட்டில் இருந்தப்படியே சுலபமாக பெறலாம் – எளிய வழிமுறைகள் இதோ!!

பான் கார்டு பணப் பரிவர்த்தனைக்கும் மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும் பயன்படுகிறது. தற்போது நீங்கள் உங்களின் மொபைலில் E-PAN கார்டை பெற வேண்டுமா? இதற்கான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

E-PAN கார்டு

இந்தியாவில் பான் கார்டு ஆனது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. பான் கார்டு பணப் பரிவர்த்தனைக்கும் மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும். பான் கார்டு பெற்றுள்ளீர்கள் எனில் அதுதான் உங்களின் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பராக கருதப்படுகிறது. இது நிரந்தர கணக்கு எண் எனப்படும் 10-இலக்க ஆல்பா நியூமெரிக்கல் நம்பர்களை கொண்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் தாரர்களுக்கும் ரூ.1000 பரிசு – மாநில அரசின் சூப்பர் திட்டம்!

Exams Daily Mobile App Download

நீங்கள் 50 ஆயிரத்தை விட பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டுமெனில் பான் கார்டு வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் உங்களின் மொபைலில் நீங்கள் E-PAN-ஐ வைத்திருந்தால் அனைத்து இடங்களுக்கும் பான் கார்டை சுலபமாக எடுத்து செல்லலாம். நீங்கள் வீட்டில் இருந்தவாறு உங்களின் E-பான் கார்டை ஆன்லைன் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வழிமுறைகள்

1. முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் E-PAN-ஐ பதிவிறக்கம் செய்வதற்கான Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

3. அடுத்ததாக உங்களின் பான் எண்ணை உள்ளிட வேண்டும்.

4. மேலும் உங்களின் 2 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்ட பிறகு உங்களின் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.

5. இப்போது கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தையும் படித்து விட்டு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த OTP எண்ணை உள்ளிட்ட வேண்டும்.

7. அடுத்ததாக நீங்கள் Paytm, UPI அல்லது டெபிட் கார்டு மூலமாக ரூ.8-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

8. இறுதியாக உங்களது E-PAN-ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!