இலவசமாக ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் – முழு விவரங்களுடன்!

0
இலவசமாக ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் - முழு விவரங்களுடன்!
இலவசமாக ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் - முழு விவரங்களுடன்!
இலவசமாக ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் – முழு விவரங்களுடன்!

பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால் ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம்.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒரு சான்றாகும். அதே போல குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக இறப்பு சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். அதாவது, தமிழக அரசு விதிமுறைகளின்படி ஒரு குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் மற்றும் இறப்பு சான்றிதழுக்கு 7 நாட்களுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அதாவது, உங்களது பஞ்சாயத்திலேயே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். ஒரு வேளை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை தொலைத்துவிட்டாலும் ஆன்லைன் மூலமாகவே எவ்வித செலவும் இல்லாமல் விண்ணப்பித்து 2 நிமிடத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம். அதாவது, சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் இரண்டு முறைகள் இருக்கின்றன.

EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் – விரைவில் PF கணக்கில் ரூ.81,000 வரவு

அதாவது, சென்னையில் வசிப்பவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்கிற இணையதள முகவரியின் மூலமாகவும், சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் வசிப்பவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்கிற இணையதள முகவரியின் மூலமாகவும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முதலில் இந்த இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழ் என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி முதலான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து உங்களுக்கு சான்றிதழ் எந்த மொழியில் வேண்டுமோ அதனையும் தேர்வுசெய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து, Generate என்பதை கிளிக் செய்துவிட்டால் தேவையான சான்றிதழ் கிடைத்துவிடும். தற்போது அந்த சான்றிதழை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here