Wipro நிறுவன ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – 15% வரைக்கும் சம்பள உயர்வு அறிவிப்பு!

0
Wipro நிறுவன ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - 15% வரைக்கும் சம்பள உயர்வு அறிவிப்பு!
Wipro நிறுவன ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - 15% வரைக்கும் சம்பள உயர்வு அறிவிப்பு!
Wipro நிறுவன ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – 15% வரைக்கும் சம்பள உயர்வு அறிவிப்பு!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, புரமோஷன் உள்ளிட்டவற்றை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி செப்டம்பரில் விப்ரோ நிறுவனம் தனது பெரும்பாலான ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது என நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜாக்பாட் அறிவிப்பு :

விப்ரோ நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக, தொடர்ந்து அட்ரிஷன் விகிதத்தினால் மோசமான தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க ஊழியர்களுக்கு, காலாண்டுக்கு ஒரு முறை சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு என சமீபத்தில் அறிவித்தது. இது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சாப்ட்வேர் சேவை நிறுவனமான விப்ரோ, சம்பள உயர்வில் எந்த மாற்றமும் செய்யத் திட்டமிடவில்லை என்றும், தனது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், விப்ரோவின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான முந்தைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வெற்றிகரமாக முதல் காலாண்டினை முடித்துள்ளோம். எனினும் மாறக்கூடிய ஊதியத்தின் அளவு குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை என மெயிலில் தெரிவித்துள்ளது .மறுபுறம் மற்றொரு அறிக்கையில் விப்ரோவின் வேரியபிள் பே காரணமாக மார்ஜின் அழுத்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 18.8% ஆக இருந்த மார்ஜின் விகிதம், நடப்பு ஆண்டில் 15% ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனாவின் வருகைக்கு பிறகு விப்ரோவில் பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது.

ராதிகாவுக்காக தற்கொலை செய்யும் கோபி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

அந்த காலகட்டத்தில் நிறுவனம் அட்ரிஷன் பிரச்சனையையும் எதிர்கொண்டது. மேலும் அட்ரிஷன் விகிதத்தினை குறைக்கவும், ஊழியர்களை தக்கவைத்து கொள்ளவும், ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வை வழங்க உள்ளதாக அறிவித்தது. இதன்படி செப்டம்பரில் பெரும்பாலான ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வை வழங்க திட்டமிட்மிட்டுள்ளதாகவும், சிறப்பான செயல் திறனை காட்டுபவர்களுக்கு 15% மேலாகவும் சம்பள உயர்வினை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. விப்ரோவின் இந்த சம்பள அறிவிப்பானது நடுத்தர நிர்வாகம் வரையில் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!