EPFO ஊழியர்களின் கவனத்திற்கு – விபத்து மரணம் ஏற்பட்டால் இரட்டிப்பு தொகை!

0
EPFO ஊழியர்களின் கவனத்திற்கு - விபத்து மரணம் ஏற்பட்டால் இரட்டிப்பு தொகை!
EPFO ஊழியர்களின் கவனத்திற்கு - விபத்து மரணம் ஏற்பட்டால் இரட்டிப்பு தொகை!
EPFO ஊழியர்களின் கவனத்திற்கு – விபத்து மரணம் ஏற்பட்டால் இரட்டிப்பு தொகை!

EPFO பணியாளர்களின் திடீர் மரணத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை மத்திய வாரியம் இரட்டிப்பாக வழங்க முடிவு செய்துள்ளது.

EPFO அறிவிப்பு:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு வழங்கப்படுகிறது. தற்போது பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி EPFO பணியாளர்களின் திடீர் மரணத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை மத்திய வாரியம் இரட்டிப்பாக வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நாளை (நவ.13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இதன் மூலம் 30 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. EPFO ஊழியர் விபத்து மரணம் அடைந்தால், தற்போது அதை சார்ந்திருப்பவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2006ல் சார்பதிவாளர்களுக்கு, 50,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த தொகையானது 50 ஆயிரத்தில் இருந்து, 4.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது விபத்து மரணம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து EPFO சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு ஊழியரின் கோவிட் அல்லாத மரணம் அதாவது இயற்கை மரணம் ஏற்பட்டால், அவரது குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த தொகை வாரியத்தின் ஒவ்வொரு பணியாளருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். நல நிதியில் இருந்து இத்தொகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், மத்திய பணியாளர் நலக் குழு மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றின் ஒப்புதலுடன் இந்தத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அதே சமயம் ஊழியர் கொரோனாவால் உயிரிழந்தால் ESIC கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு தனியார் துறை ஊழியர் குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. காப்பீடு செய்யப்பட்ட ஊழியரின் தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் ஒவ்வொரு மாதமும் சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மகனுக்கு 25 வயது வரையிலும், மகளுக்கு திருமணம் ஆகும் வரையிலும் இந்த சலுகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச நிவாரணமாக மாதம் 1,800 ரூபாய் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!