தொலைத்தொடர்பு துறையில் பணிபுரிய வாய்ப்பு – ஊதியம்: ரூ.1,51,100/-

0
தொலைத்தொடர்பு துறையில் பணிபுரிய வாய்ப்பு - ஊதியம்: ரூ.1,51,100/-
தொலைத்தொடர்பு துறையில் பணிபுரிய வாய்ப்பு - ஊதியம்: ரூ.1,51,100/-
தொலைத்தொடர்பு துறையில் பணிபுரிய வாய்ப்பு – ஊதியம்: ரூ.1,51,100/-

தொலைத்தொடர்பு துறையில் (DOT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Group B Gazetted பிரிவின் கீழ்வரும் Sub Divisional Engineer மற்றும் Junior Telecom Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகளுக்கு தகுதியான அரசு அதிகாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இந்த பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வில்லாது Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்கலாம் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Telecommunication (DOT)
பணியின் பெயர் Sub Divisional Engineer, Junior Telecom Officer
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தொலைத்தொடர்பு துறை காலிப்பணியிடங்கள்:

தொலைத்தொடர்பு துறையில் (DOT) காலியாக உள்ள Group B Gazetted பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 06 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Sub Divisional Engineer – 05 பணியிடங்கள்
  • Junior Telecom Officer – 01 பணியிடம்
Group B Gazetted பணிக்கான கல்வி தகுதி:

இந்த DOT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் Diploma அல்லது Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Group B Gazetted பணிக்கான அனுபவம்:

Sub Divisional Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள் / யூனியன் பிரதேச நிறுவனங்கள் / பொது நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level-7 (Rs. 44900-142400) அல்லது Level-6 (Rs. 35400-112400) என்ற ஊதிய அளவின் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மாதம் ரூ.44,000/- ஊதியத்தில் NIEPMD நிறுவன வேலைவாய்ப்பு – அக். 28 விண்ணப்பிக்க இறுதி நாள்!

Junior Telecom Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level-6 (Rs. 35400-112400) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்

Group B Gazetted பணிக்கான வயது வரம்பு:

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 21.11.2022 அன்றைய நாளின் படி, 56 வயதிற்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Group B Gazetted பணிக்கான ஊதியம்:
  • Sub Divisional Engineer பணிக்கு Level 8 என்ற ஊதிய அளவின் படி ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும்,
  • Junior Telecom Officer பணிக்கு Level 7 என்ற ஊதிய அளவின் படி ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
DOT தேர்வு செய்யும் விதம்:

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

DOT விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DOT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 21.11.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!