இரவு ஊரடங்கு உத்தரவின் போது டோர் டெலிவரிக்கு தடை – மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

0
இரவு ஊரடங்கு உத்தரவின் போது டோர் டெலிவரிக்கு தடை - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!
இரவு ஊரடங்கு உத்தரவின் போது டோர் டெலிவரிக்கு தடை - மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!
இரவு ஊரடங்கு உத்தரவின் போது டோர் டெலிவரிக்கு தடை – மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள நொய்டா மாநகராட்சியில் தற்போது விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு உத்தரவின் போது உணவகங்களில் இருந்து வீட்டு விநியோக சேவைகளுக்கு தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விநியோக சேவை

கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக உத்திர பிரதேச மாநிலம் முழுவதும் தற்போது இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உணவகங்கள் மற்றும் தாபாக்களில் இருந்து வீட்டு விநியோக சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நொய்டா பகுதியில் இயங்கி வந்த உணவகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டு விநியோக சேவைகள் தடை செய்யப்படும் என்று கவுதம புத்தா நகர் காவல்துறை அறிவித்துள்ளது.

ஒரு வேப்பங்குச்சியின் விலை ரூ.1800 – அமெரிக்க நிறுவனத்தின் வியாபார யுக்தி!

அதாவது நொய்டா பகுதியில், 38 வயதான சுனீல் அகர்வால் என்பவர் ஒரு உணவகம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு, குடிபோதையில் அந்த உணவகத்துக்கு வந்த மூன்று பேர் அகர்வாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்னால் நொய்டாவில், தடுப்பு பிரிவு 144 கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, இரவு நேரங்களில் வீட்டு விநியோகம் செய்வதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – அரசின் நடைமுறைகள் வெளியீடு!

இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் கூறுகையில், ‘நொய்டாவின் கவுதம புத்தா நகரில் CrPC பிரிவு 144 அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற படி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும். இரவு நேர ஊரடங்கு காலத்தில் அவசரகால சேவைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஹோட்டல்கள் மற்றும் தாபாக்களில் வீட்டு விநியோக சேவைகளுக்கு தடை விதிக்கப்படும்’ என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!