தமிழக ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!

0
தமிழக ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!
தமிழக ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!
தமிழக ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்! இதை செய்தால் போதும்!

தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக அனைத்து நலத்திட்டங்களை செயற்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் ரேஷன் கார்டு வைத்திருப்பது முக்கியமானதாகும். இப்போது உங்களின் ரேஷன் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் அதனை மீண்டும் திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலமாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் தகுதியற்றவர்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பெற்று கள்ள சந்தைகளில் விற்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், குறிப்பாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தும் ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்த பிறகு வழங்கப்படுகிறது.

மேலும் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயற்படுத்தப்படுகிறது. அதனால் ரேஷன் கார்டு பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். இதையடுத்து தற்போது உங்களின் ரேஷன் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் அதனை மீண்டும் திரும்ப பெறலாம். இதற்கு நீங்கள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் விண்ணப்பிக்க முடியும். இதற்கு நேரடி முறையில் விண்ணப்பிக்க மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கான படிவத்தையும் பூர்த்தி செய்து அதனுடன் 2 கட்டண ரசீதுகளையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வழிமுறைகள்

  • இதற்கு முதலில் https://www.tnpds.gov.in/ என்ற தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • இதில் பயனாளர் நுழைவு எண்-ஐ உள்ளிட வேண்டும்.
  • அதன்பின்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு “OTP” எண் அனுப்பப்படும்.
  • இந்த OTP எண்ணை உள்ளீடு செய்து ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்வதற்கான TAB தெரியும்.
  • இந்த TAB ஐ கிளிக் செய்து அதில் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இறுதியாக உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து “SAVE” என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து உங்களின் ரேஷன் கார்டு PDF வடிவில் தோன்றும். இதனை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!