மீண்டும் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று – மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
மீண்டும் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை!
மீண்டும் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை!
மீண்டும் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று – மருத்துவர்கள் எச்சரிக்கை!

கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று நம்முடன் இருந்து வரும் சூழலில் அதற்கான அறிகுறிகளும் மாற்றமடைந்து உள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இதற்கான எச்சரிக்கைகளை அறிவித்துள்ளனர்.

ஓமிக்ரான் அறிகுறிகள்:

கொரோனா தொற்றிற்கு முன்னதாக இருந்த அறிகுறிகளான, வாசனை இழப்பு, மூச்சுத் திணறல், மார்பில் விறைப்பு போன்றவை இனி கொரோனவிற்கான அறிகுறிகளாக இருக்காது. கொரோனா வைரஸ் உருவாகி மூன்று ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், அதற்கான அறிகுறிகளும் மாற்றமடைந்து உள்ளன. மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் ஓமிக்ரான் தொற்று இனி வேறு வகையான அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளனர். தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்லது அதற்கு முன்பே பாதிக்கப்பட்டவர்கள், எனவே அறிகுறிகள் லேசானவை மற்றும் முன்னர் இருந்தவற்றில் இருந்து வேறுபட்டு உள்ளது.

புதிய அறிகுறியாக, தொண்டை புண் இன்னும் முக்கிய அறிகுறியாகும். ஒரு அறிக்கையின்படி, 53 சதவீத ஓமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தொண்டை புண் ஒரு அறிகுறியாக பட்டியலிடப்பட்டுள்ளது, அதே சமயம் டெல்டா வகை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 34 சதவீதம் பேருக்கு தொண்டை புண் இருந்தது. மேலும், ஓமிக்ரான் தலைவலி பொதுவாக அழுத்தம் அல்லது குத்துதல் போன்ற உணர்வுடன் மிதமான மற்றும் தீவிரமான வலியை கொண்டிருக்கும். வலியின் இடம் தலையின் இருபுறமும் உள்ளது மற்றும் இந்த வலி பொதுவாக மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும். மிகவும் பொதுவான அடுத்த இரண்டு அறிகுறிகளில் மூக்கு அடைப்பு மற்றும் சளி இல்லாமல் இருமல் ஆகியவை அடங்கும்.

தமிழகத்தில் அமைச்சுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

மூக்கு ஒழுகுதல், சளியுடன் கூடிய இருமல், கரகரப்பான குரல், தும்மல், சோர்வு, தசைவலி, தலைசுற்றல், காய்ச்சல், உடல்வலி, பசியின்மை, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்றவை ஓமிக்ரானின் மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும். ஆல்ஃபா வகை மாறுபாடு வெளிப்பாடுக்குப் பிறகு அறிகுறிகள் உருவாக ஐந்து நாட்கள் எடுத்தது. பீட்டா மாறுபாட்டிற்கு, அறிகுறிக்கான காலம் 4.5 நாட்கள் ஆகும். டெல்டாவை பொறுத்தவரை, இது 4.41 நாட்களாகும், ஓமிக்ரானுக்கு இது 3.42 நாட்களாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளிப்படும் அறிகுறிகளை சரியாக கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!