தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர்கள் முகாம் – பன்றி காய்ச்சல் எதிரொலி!!
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் ஒருவர் பாதிப்படைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளார். இதையடுத்து மேலும் நோய் பரவாமல் இருக்க தற்போது, மாவட்டத்தில் மருத்துவர்கள் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மருத்துவர்கள் முகாம்:
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு கோழி பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிளாரா (51) என்ற பெண் சில நாட்களுக்கு முன்பாக பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த பன்றி காய்ச்சல் H1N1 வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் முதலில் மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் உள்ள செல்களை பாதிக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மலில் இருந்து வரும் நீர்த்துளிகள் அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமாக H1N1 வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
அதனால் மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாவட்டத்தில் மருத்துவர்கள் முகாம் நடைபெற்று வருகிறது. மருத்துவ முகாமில் யாரேனும் மக்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் முன்னரே கண்டறிப்பட்டு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படும்.