தமிழகத்தில் இலவசமாக மருத்துவப் படிப்பில் சேர வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

0
தமிழகத்தில் இலவசமாக மருத்துவப் படிப்பில் சேர வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் இலவசமாக மருத்துவப் படிப்பில் சேர வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி கிடைத்திட வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த அகாடமியில் இலவசமாக மருத்துவ படிப்புகளை தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக்கழகம் வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இலவச மருத்துவ படிப்பு

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் கல்வி கற்று அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமென அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக இலவச மருத்துவ படிப்பு மேற்கொள்வது குறித்து தேனி நலம் அகாடமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக தேனி நலம் அகாடமி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களும் மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக இலவசமாக மருத்துவ படிப்பிற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவசர சிகிச்சை உதவியாளர், சர்க்கரை நோய் ஆலோசகர், உணவு கலை உதவியாளர் ஆகிய படிப்புகளுக்கு கற்றுத்தரப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோர் கவனத்திற்கு – ரூ.150 போதும்! ரூ.8 லட்சம் ரிட்டன்ஸ்!

Exams Daily Mobile App Download

அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சான்றிதழ், நவீன மருத்துவமனை வசதியுடன் கூடிய நேரடி பயிற்சிகள், இலவச சீருடை, புத்தகம், ஊக்கத்தொகை உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது தேனி நலம் அகாடமியில், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் வழங்கும், டிப்ளமோ இன் லேப் டெக்னீசியன், டிப்ளமோ இன் ஹெல்த் அசிஸ்டென்ட் போன்ற 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்படிப்பில் சேர விரும்பும் நபர்கள் தேனி நலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் 88700 07020 என்ற எண்ணின் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here