ஆதார் அட்டையின் பழைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் அட்டையின் பழைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையின் பழைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? - எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையின் பழைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!

நாட்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமான ஆதார் ஆடையில் உள்ள நமது பழைய புகைப்படத்தை மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகளை தற்போது UIDAI வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பானது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆதார் அட்டை புகைப்படம்:

அரசின் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் அட்டையில், பயோமெட்ரிக் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். மேலும், புகைப்படம் அதில் முக்கிய சான்றாக கருதப்படுகிறது. ஆனால், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் மிகவும் சிறு வயதில் மற்றும் பல வருடங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்டதாக பலருக்கும் இருக்கிறது. இதனால் ஆவணமாக சமர்பிப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. இதனால் ஆதார் வழங்குனரான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது.

ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு பயனர்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை ஆன்லைனில் மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கான படிநிலைகள்:

  • முதலில், UIDAI இன் இணையதளத்தில் இருந்து அப்டேட் படிவத்தைப் பதிவிறக்கிய பிறகு, அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.
  • படிவத்தை பூர்த்தி செய்து, சமர்ப்பித்து பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும்.

இந்தியாவில் இன்று 5,108 பேருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சி தகவல் வெளியீடு!

Exams Daily Mobile App Download
  • இதன்பிறகு, உங்களை நேரடியாக புகைப்படம் எடுப்பார்கள். மேலும் விவரங்களை புதுப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) அடங்கிய ஒப்புகை சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். கோரிக்கை செயலாக்கப்படுவதற்கு 90 நாட்கள் வரை ஆகலாம்.
  • அதன்பிறகு உங்களின் கோரிக்கை நிறைவேறிய பின் ஆதார் அட்டை புதிய புகைப்படத்துடன் கிடைத்து விடும்.
  • ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில், UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ‘ஆதாரைப் பதிவிறக்கு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது, ஆதார் எண், பதிவு ஐடி அல்லது Virtual ஐடியை உள்ளிட வேண்டும்.
  • இப்பொழுது காட்டும், கேப்ட்சாவை உள்ளிட்டு ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது, உங்கள் ஆதாரின் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

[table “1078strong” not found /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!