ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்ற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸி ஸ்டெப்ஸ்!!

0
ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்ற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸி ஸ்டெப்ஸ்!!
ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்ற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸி ஸ்டெப்ஸ்!!
ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்ற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்!! ஈஸி ஸ்டெப்ஸ்!!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் அட்டை அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக விளங்குகிறது. அதனால் இதில் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். இப்போது உங்களின் ஆதாரில் புகைப்படத்தை எப்படி எளிய வழிமுறைகள் மூலமாக மாற்றலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆதார் அட்டை

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபரின் அடையாள அட்டையாகவும், அனைத்து ஆவணங்களை விட முக்கியமானதாகவும் விளங்குகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் மற்ற அரசின் ஆவணங்களில் இருப்பது போன்று சரியானதாக இருக்க வேண்டும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தவறாக இருப்பின் இதனை மாற்ற UIDAI அனுமதி அளிக்கிறது.

மேலும் இதில் எத்தனை திருத்தங்களை மேற்கொண்டாலும் ஆதார் எண் மாறாது. ஒரு தனி நபருக்கு வாழ்நாள் முழுவதுமாக அந்த எண் அடையாள எண்ணாக விளங்குகிறது. இதனை தொடர்ந்து தற்போது நீங்கள் வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்து விட்டால் அந்த முகவரியை கட்டாயமாக மாற்ற வேண்டும். இதே போல் நீங்கள் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படம் தான் இப்போதும் உங்களின் ஆதாரில் இருக்கிறதெனில் தற்போது உள்ள புகைப்படத்தை மாற்றலாம். இதனை நீங்கள் UIDAIயின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கோ அல்லது அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு சென்று திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றவதற்கான வழிமுறைகள்

1. இதற்கு முதலில் UIDAIயின் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையத்திற்கோ அல்லது ஆதார் சேவா கேந்திராவிற்கோ சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் வேகமெடுக்கும் மர்ம காய்ச்சல் – சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு!

3. ஆதார் நிர்வாகி பயோமெட்ரிக் முறையில் அனைத்து விவரங்களையும் சரிபார்ப்பார். அதன்பின்பு ஆதார் நிர்வாகி உங்களின் புதிய புகைப்படத்தை எடுப்பார்.

4. இதையடுத்து ஆதார் நிர்வாகி ஒப்புகை சீட்டு, புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை வழங்குவார். இதற்கு சேவை கட்டணமாக ஜிஸ்டியுடன் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

5. இறுதியாக உங்களின் புதிய புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!