நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணுவீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்… வந்துள்ள புதிய அப்டேட்!

0
நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணுவீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்... வந்துள்ள புதிய அப்டேட்!
நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணுவீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்… வந்துள்ள புதிய அப்டேட்!

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை தற்போது இளைய தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மெட்டா பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள அப்டேட் குறித்து இப்பதிவில் காண்போம்.

இன்ஸ்டாகிராம்:

சமூக வலைதங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் தகவல் பரிமாற்றமும் செய்யலாம் அது மட்டுமல்ல போட்டோ மற்றும் வீடியோக்களையும் எளிதாக ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற சமூக வலைதலங்களை விட இன்ஸ்டாகிராமில் தான் யூசர்கள் அதிகமாக உள்ளனர். ஏனெனில் இதன் எளிய செய்தி பரிமாற்றமும் பாதுகாப்பு அம்சமும் மக்களை கவர்கிறது. மேலும் இன்ஸ்டாகிராம் ஒரு சிறந்த தொழில்களுக்கான விளம்பர தலமாகவும் உள்ளது.

நாளை முதல் 7 நாட்களுக்கு தொடர் விடுமுறையில் வங்கிகள் – விடுமுறை பட்டியல் இதோ!

அதனால் தங்களின் தொழிலை விரிவுபடுத்ததுவதற்காகவே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியுள்ளவர்கள் ஏராளம். இத்தகைய பயன்பாடுடைய இன்ஸ்டாவில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இன்ஸ்டா யூசர்களின் சாட் பக்கத்தில் ‘நோட்ஸ்’ (Notes) என்ற புதிய அம்சம் இடம் பெற்றுள்ளது. இதில் 60 எழுத்துக்களை கொண்ட செய்திகளை பிறருக்கு பகிர முடியும். இந்த நோட்ஸுக்கு உங்களின் பாலோவர்ஸும் பதிலளிக்கலாம். இது ஸ்டோரி போலவே 24 மணி நேரத்தில் டெலிட் ஆகி விடும்.

Exams Daily Mobile App Download

மேலும் உங்களின் இன்ஸ்டா நோட்ஸை யார் பார்க்க வேண்டும் என்பதையும் நீங்களே செட் செய்யலாம். இந்த புதிய அம்சத்தால் வீடியோ, போட்டோ போன்ற தகவல்களை எளிதாக பாலோவர்ஸ்களுக்கு அறிவிக்க முடியும். அதனை தொடர்ந்து தற்போது பிறருடைய ஸ்டோரிக்களை ரீபோஸ்ட் செய்யும் அம்சம் உள்ளது. அதே போலவே, போட்டோ மற்றும் வீடியோக்களை ரீபோஸ்ட் செய்யும் வகையிலான வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!