பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா யார் தெரியுமா? வெளியான சுவாரசியமான தகவல்கள்!

0
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா யார் தெரியுமா? வெளியான சுவாரசியமான தகவல்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா யார் தெரியுமா? வெளியான சுவாரசியமான தகவல்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா யார் தெரியுமா? வெளியான சுவாரசியமான தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா குறித்தான பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. சுசித்ரா இத்தனை சீரியல்களில் நடித்திருக்கிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவை பெற்ற சீரியல் என்றால் அது நிச்சயமாக பாக்கியலட்சுமி சீரியல் தான். டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி சீரியல் தான் முதலிடத்தை பிடித்து வருகிறது. தற்போது பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா குறித்தான பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, பிறந்து வளர்ந்து பள்ளி, கல்லூரி படிப்பை முழுக்க பெங்களூரில் தான் முடித்திருக்கிறார். அதாவது, பெங்களூரில் உள்ள நேஷனல் பள்ளி (National Public School) என்கிற பள்ளியில் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். பெங்களூர் நேஷனல் கல்லூரியிலேயே பட்டபடிப்பையும் முடித்துவிட்டார். கல்லூரி படிப்பை நிறைவு செய்த பிறகு தான் சுசித்ராவிற்கு நடிப்பின் மீது ஆர்வம் வர ஆரம்பித்தது. இதற்கு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடிக்க அறிமுகமாகியிருக்கிறார். எ(A) என்கிற கன்னட திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கிறார்.

பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிற்கு அனுப்பும் தனம் – சீரியலில் புதிய திருப்பம்!

இந்த திரைப்படங்களை தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி, மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் என வரிசையாக பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் மூலமாக சீரியல் வாய்ப்புகளும் வர துவங்கியது. மனே தன, காவியாஅஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி, அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற பல கன்னட மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த சீரியல்களுக்கு பிறகு தான் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தூள் கிளப்பி கொண்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!