தமிழகத்தில் நாளை (அக்.07) எந்தெந்த இடங்களில் ‘மின்தடை’ தெரியுமா? முழு விவரம் இதோ!!

0
தமிழகத்தில் நாளை (அக்.07) எந்தெந்த இடங்களில் 'மின்தடை' தெரியுமா? முழு விவரம் இதோ!!
தமிழகத்தில் நாளை (அக்.07) எந்தெந்த இடங்களில் 'மின்தடை' தெரியுமா? முழு விவரம் இதோ!!
தமிழகத்தில் நாளை (அக்.07) எந்தெந்த இடங்களில் ‘மின்தடை’ தெரியுமா? முழு விவரம் இதோ!!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் இருக்கும் பழுதுகளை மாதந்தோறும் சரி செய்வதற்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் நாளை (அக்.07) கமுதியில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் நாள்தோறும் மின் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில் இருக்கும் பழுதுகள், மழைக்காலங்களில் சாலையோரங்களில் விழுந்து கிடக்கும் மின் கம்பங்கள் உள்ளிட்டவை உடனடியாக சரி செய்ய பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெறுகிறது. இதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரையிலும் சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் நாளை ராமநாதபுர மாவட்டத்திலுள்ள கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரையிலும் நாளை (அக்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்ய இருப்பதால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறையில் குளறுபடி – உடனடியாக திறக்கப்படும் பள்ளிகள்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பசும்பொன், பாா்த்திபனூா், அபிராமம், முதுகுளத்தூர், பேரையூர், கமுதி நகர், மண்டலமாணிக்கம், செங்கப்படை, கீழராமநதி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (அக்.07) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!