ஒரு எபிசோட் தொகுத்து வழங்க பிரியங்காவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? லீக்கான தகவல்!

0
ஒரு எபிசோட் தொகுத்து வழங்க பிரியங்காவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? லீக்கான தகவல்!
ஒரு எபிசோட் தொகுத்து வழங்க பிரியங்காவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? லீக்கான தகவல்!
ஒரு எபிசோட் தொகுத்து வழங்க பிரியங்காவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? லீக்கான தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்துவழங்கி லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கும் பிரியங்கா ஒரு எபிசோட் தொகுத்து வழங்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா:

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து எக்கச்சக்கமான ரசிகர் கூட்டங்களை சம்பாரித்தவர் தான் விஜே பிரியங்கா. ஒல்லி பெல்லி என்கிற நிகழ்ச்சியின் மூலமாக தான் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்பு, நாளடைவில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக எந்த ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும் அந்த நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது சாதாரணமான பேச்சு திறமையாளும், காமெடி பேச்சாழும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார். சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், சூரிய வணக்கம், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் மற்றும் பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

தொகுப்பாளராக இருந்து ரசிகர் பட்டாளங்களை சம்பாரித்த பிறகு பிரியங்காவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெளியே அனைவரையும் சந்தோசப்படுத்தியது போலவே பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களையும் கலகலப்பாக வைத்துக்கொண்டார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் தட்டி சென்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்துவழங்க மீண்டும் இணைந்துகொண்டார்.

அரங்கேறும் எழில் & அமிர்தாவின் திருமண வைபோகம் – பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்பம்!

தற்போது பிரியங்கா ஒரு நிகழ்ச்சியை தொகுத்துவழங்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரியங்கா ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். ஆனால், உண்மையாகவே பிரியங்கா ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாரா என்பது தெரியவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!