‘இந்த’வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? – உஷார் மக்களே! பணம் பறிபோகும் அபாயம்!
இந்திய ரிசர்வ் வங்கி, போதிய வருமானம் மற்றும் மூலதனம் இல்லாமல் தவித்து வரும் மகாராஷ்டிராவில் உள்ள சேவா விகாஸ் வங்கிக்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது பயனர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி உரிமம் ரத்து:
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியானது, வங்கிகளுக்கான நிபந்தனை மற்றும் விதிமுறைகளை நிர்வகித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க தவறும் வங்கிகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
இதுபோல் இதற்கு முன்னதாக பல வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமமானது ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை நிர்வகிப்பதற்கு தேவையான வருமானம் மற்றும் மூலதனம் இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி அக்டோபர் 10ஆம் தேதி முதல் சேவா விகாஸ் வங்கியின் தொழில்முறை நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம் – அரசின் அதிரடி நடவடிக்கை! பயணிகள் கவனத்திற்கு!
Exams Daily Mobile App Download
சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் முழுமையான பணத்தை திருப்பி செலுத்துவதற்கான நிலையில் வங்கியின் பொருளாதாரம் தற்போது இல்லை. இதனால் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கான தொகை முழுவதுமாக திருப்பி செலுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி தனிப்பட்ட அதிகாரி ஒருவரையும் நியமித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்