PM கிசானின் 12 ஆவது தவணையை பெற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க!

0
PM கிசானின் 12 ஆவது தவணையை பெற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க!
PM கிசானின் 12 ஆவது தவணையை பெற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க!
PM கிசானின் 12 ஆவது தவணையை பெற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க!

PM கிசான் திட்டத்தின் 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை பெற விரும்பும் விவசாயிகள் கட்டாயமாக eKYC செயல்முறையை அப்டேட் செய்ய வேண்டும். மேலும், eKYC செயல்முறையை அப்டேட் செய்வதற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

PM கிசான்:

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு மட்டுமே ரூ.6000 வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கிட்டத்தட்ட 88 ஆயிரத்து 775 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரைக்கும் 11 தவணைக்கான நிதியுதவியை விவசாயிகள் பெற்றுவிட்டனர். மேலும், PM கிசான் திட்டத்தின் நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், விவசாயிகள் 12 ஆவது தவணைக்கான நிதியுதவியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த முறை PM கிசான் திட்டத்தின் நிதியுதவியை வழங்குவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, PM கிசான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே PM கிசானின் 12 ஆவது தவணைக்கான நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் கட்டாயமாக eKYC செயல்முறையை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?- இதோ உங்களுக்கான வாய்ப்பு!

முதலில், eKYC செயல்முறையை அப்டேட் செய்ய ஜூலை 31 ஆம் தேதி வரைக்கும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கால அவகாசத்தை மத்திய அரசு நீடித்துள்ளது. அதாவது, eKYC செயல்முறையை அப்டேட் செய்ய ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விவசாயிகள் PM கிசான் திட்டத்தை புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு 12 ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here