ரூ.54,000 ஊதியத்தில் DRDO ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது

0

ரூ.54,000 ஊதியத்தில் DRDO ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம் (DRDO – DMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த் புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow, Research Associates பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அத்தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Research Fellow, Research Associates பணிக்கு என்று தற்போது 16 பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Metallurgical Engineering / Materials Science and Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 24.07.2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு 28 வயதானது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.54,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் மட்டும் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள், இதில் அனுபவம் மற்றும் திறமை பொறுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

DRDO Online Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!