தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம் – முன்னிலையில் திமுக!

0
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம் - முன்னிலையில் திமுக!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம் - முன்னிலையில் திமுக!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம் – முன்னிலையில் திமுக!

தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) துவங்கி இருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக அணி முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் வாக்கு பதிவு நடத்தப்பட்டது. தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 268 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று (பிப்.22) காலை 8 மணி முதல் துவங்கி இருக்கிறது.

பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதலாவதாக எண்ணப்பட்ட தபால் வாக்குகளின் முடிவுகள் அடுத்த அரை மணிநேரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 8.20 நிலவரப்படி 14 நகராட்சிகளில் திமுக முன்னிலை வகித்தது. தொடர்ந்து 8.30 நிலவரப்படி போட்டியின்றி 4 மாநகராட்சி கவுன்சிலர்கள், 18 நகராட்சி கவுன்சிலர்கள், 196 பேரூராட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அடுத்து, 8:33 படி, பேரூராட்சிகளில் திமுக 103 மற்றும் அதிமுக 10 என்ற இடங்களில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து 8:53 நிலவரப்படி 97 வார்டுகளில் திமுக மற்றும் 49 வார்டுகளில் அதிமுக முன்னிலை வகித்தது. மேலும், 8:47 நிலவரப்படி பேரூராட்சிகள் திமுக 265 வார்டுகள் மற்றும் அதிமுக 177 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை வழங்கப்படுமா?

அடுத்தபடியாக 8:53 நிலவரப்படி, 310 வார்டுகளில் திமுக மற்றும் 227 வார்டுகளில் அதிமுக எனவும் மற்ற கட்சிகள் 107 வார்டுகளில் முன்னிலை வகித்துள்ளது. தொடர்ந்து 8:54 நிலவரப்படி மாநகராட்சியில் 40 வார்டுகளில் திமுக மற்றும் 3 வார்டுகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை சேர்த்து ஒட்டுமொத்தத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here