போட்டி போட்டு தீபாவளி ஸ்பெஷல் திட்டங்களை அறிவித்த Airtel,Jio,Vi – ரூ.29 க்கு 2 ஜிபி டேட்டா!

0
போட்டி போட்டு தீபாவளி ஸ்பெஷல் திட்டங்களை அறிவித்த Airtel,Jio,Vi - ரூ.29 க்கு 2 ஜிபி டேட்டா!
போட்டி போட்டு தீபாவளி ஸ்பெஷல் திட்டங்களை அறிவித்த Airtel,Jio,Vi - ரூ.29 க்கு 2 ஜிபி டேட்டா!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, Vi போன்ற நிறுவனங்கள் தங்களது பயனர்களை கவரும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

தீபாவளி ஸ்பெஷல்:

இந்தியாவில் பண்டிகை காலம் என்றாலே எல்லா பொருட்களுக்கும் ஆபர்களும் சலுகைகளும் அறிவிக்கப்படும். மேலும் ஏராளமான புதிய பொருட்களும் வணிக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு பொருட்கள் மட்டுமல்லாது தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தீபாவளிக்கு தங்களது பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஏர்டெல் ரூ.209க்கு 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை ஆகிய நன்மைகளை 21 நாட்களுக்கு வழங்குகிறது.

மேலும் ரூ.155, 176 திட்டங்களில் கூடுதல் டேட்டாவை 24 முதல் 28 நாட்களுக்கு பெறலாம். அடுத்தாக ரிலையன்ஸ் ஜியோ ரூ 149 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் ஆகிய சலுகைகளை 20 நாட்களுக்கு வழங்குகிறது. அதிக டேட்டா தேவைப்படும் பயனர்கள் டேட்டா பூஸ்டரை பயன்படுத்தலாம். அதனை தொடர்ந்து வோடபோன் – ஐடியா ரூ.269 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

LICயின் ஜீவன் உமாங் – வாழும்போதே பலன் தரும் சூப்பரான சேமிப்பு திட்டம்!! முழு விவரம் உள்ளே!!

மேலும் ரூ.234 திட்டத்தில் மேற்சொன்ன சலுகையை 24 நாட்களுக்கு வழங்குகிறது. அடுத்ததாக ரூ.199க்கு 18 நாட்களுக்கு அதே பலன் கிடைக்கிறது. மேலும் ரூ.151 டேட்டா பூஸ்டர் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மெம்பர்ஷிப் ஆகியவை 30 நாட்களுக்கு 8ஜிபி டேட்டாவுடன் வழங்குகிறது. மேலும் ரூ.82 திட்டத்தில் 4 ஜிபி டேட்டாவை 14 நாட்களுக்கு வழங்குகிறது. அதே போல ரூ.58 ரூபாய்க்கு 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா, ரூ.39 ரூபாய்க்கு 7 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா, ரூ.29 ரூபாய்க்கு 2 நாட்கள் வேலிடிட்டி உடன் 2 ஜிபி டேட்டா ஆகிய புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!