EPFO ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட் – ரூ.14,000 போனஸ் அறிவிப்பு!
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பண்டிகைக்காக ரூ.14,000 போனஸ் தொகை அளிக்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தீபாவளி போனஸ்:
தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைத்து துறைகளை சார்ந்த ஊழியர்களும் தங்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது ஊழியர்களுக்கு தீபாவளியை ஒட்டி போனஸ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து சமூக பாதுகாப்பு அமைப்பு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் படி, EPFO ன் அனைத்து குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘பி’ பணியாளர்களுக்கும் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், தகுதியான EPFO ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ.13,806க்கு உட்பட்ட 60 நாட்களுக்கான ஊதியத்திற்கு சமமான PLBஐப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனம் மக்களே… தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் தகவல்!!
Exams Daily Mobile App Download
தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் இந்த போனஸை பெற தகுதியானவர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தம் மற்றும் சாதாரண நிலை கூடுதல் துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.