தமிழகத்தில் தீபாவளி விடுமுறை எத்தனை நாட்கள் – அதிர்ச்சியில் மாணவர்கள்!
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிவிக்க உள்ள விடுமுறை நாட்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி விடுமுறை:
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் உற்றார் உறவினர் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்று மகிழ்வார்கள். மேலும் நாடு முழுவதும் சிறப்பிக்கப்படும் முக்கிய பண்டிகை என்பதால் தொடர் விடுமுறை நாட்களும் அளிக்கப்படும். இந்நிலையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை ஆன நவம்பர் 12ம் தேதி அன்று வரவுள்ளது. வார இறுதி விடுமுறை தினத்தில் பண்டிகை தினம் வந்து உள்ளதால் வழக்கத்தை விட விடுமுறை நாட்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசில் பட்டதாரிகளுக்கான வேலை – சம்பளம்: ரூ.69,920/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மேலும் பண்டிகைக்கான சிறப்பு விடுமுறை இல்லை என்பதால் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் நவம்பர் 11ஆம் தேதியான இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகை என்ற இரண்டு தினங்கள் மட்டுமே அரசு விடுமுறை வழங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வாரத்தில் வெளியிடப்படும்.