EPFO வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு – வரவு வைக்கப்பட்ட வட்டி தொகை! முழு விவரம்!
இந்தியாவில் இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதையோட்டி இபிஎஃப்ஓ PF கணக்குகளில் வட்டி வரவை வைக்க தொடங்கி இருக்கிறது.
வட்டி வரவு
நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளில் வட்டி வரவு வைக்கத் தொடங்கியுள்ளது என அரசு அமைத்து தகவல் தெரிவித்துள்ளது. 2022-23 நிதியாண்டிற்கான PF கணக்கு முதலீட்டின் வட்டி விகிதம் 8.15% வழங்கப்பட்டு வரும் நிலையில், சில பயனர்கள் ஏற்கனவே தங்கள் கணக்குகளில் தங்கள் வட்டி தொகையை பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 அரசு விடுமுறை நாட்கள் – வெளியான அதிகாரப்பூர்வ பட்டியல்!
இது குறித்து EPFO வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து ஊழியர்களுக்கும் செயல்முறை தயாராக இருப்பதாகவும், அதனால் அவர்களின் கணக்கில் எப்போது வேண்டுமானாலும் வட்டி வரவு வைக்கப்படும் என்பதால் வட்டி இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது. எனவே பொறுமையாக இருங்கள் என தெரிவித்துள்ளது. இதுவரை 24 கோடி கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.