தீபாவளி போனஸ் ரூ.22,500-ஆ??? மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள் – கலக்கும் மாநில அரசு!
அக்டோபர் மாதம் வந்தாலே தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகள் வந்து விடும். தீபாவளி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது போனஸ் தொகை தான். அந்த வகையில், தற்போது மாநில அரசு ஒன்று தனது ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
தீபாவளி போனஸ்:
மகாராஷ்டிரா அரசு தீபாவளிக்கு முன்னதாகவே பண்டிகை கால போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், மும்பை எலக்ட்ரிக் சப்ளை & டிரான்ஸ்போர்ட் (பெஸ்ட்) மற்றும் மும்பையில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் அறிவிப்பின் படி, ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கும் என்று அறிவித்தார்.
மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் எலக்ட்ரிக் சப்ளை & டிரான்ஸ்போர்ட் ஊழியர்களுக்கு ரூ.22,500 போனஸ் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக முதல்வர் ஷிண்டே அறிவித்துள்ளார். இதனால், மும்பை மாநகராட்சியின் சுமார் 93 ஆயிரம் ஊழியர்களும், ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 5ஜி சேவை வெற்றிகரமாக தொடக்கம் – பிரதமர் பெருமிதம்!
Exams Daily Mobile App Download
மேலும், முதல்வர் உரையாற்றிய போது, COVID-19 தொற்றுநோய்களின் போது அரசு ஊழியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் போன்றவர்கள் செய்த சேவையை பாராட்டினார். அவர்களை மேலும் மும்பையின் முன்னேற்றத்திற்காக பணியாற்றுமாறு வலியுறுத்தினார். பிறகு, ஊழியர்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான பிரச்சனைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்படும் என்றும், மும்பை வாசிகளுக்காக ஊழியர்கள் முழு மனதுடன் பணியாற்றுவதாகவும், குடிமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் உயர் தரத்தில் இருப்பதை உறுதி செய்வதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்