விவாகரத்து வாங்கிய கோபி பாக்கியா, பாக்கியாவின் அடுத்த முடிவு என்ன? “பாக்கியலட்சுமி” சீரியலில் ட்விஸ்ட்!

0
விவாகரத்து வாங்கிய கோபி பாக்கியா, பாக்கியாவின் அடுத்த முடிவு என்ன? “பாக்கியலட்சுமி” சீரியலில் ட்விஸ்ட்!
விவாகரத்து வாங்கிய கோபி பாக்கியா, பாக்கியாவின் அடுத்த முடிவு என்ன? “பாக்கியலட்சுமி” சீரியலில் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ஆசைப்பட்டபடி, பாக்கியா விவாகரத்து கொடுத்துவிட்டார்.  இது ஒரு பக்கம் கோபிக்கு சந்தோஷம் என்றாலும் பாக்கியா, கோபியை கோர்ட்டில் அசிங்கப்படுத்தியதை கோபியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கோபி – பாக்கியா வாழ்வில் என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

“பாக்கியலட்சுமி” சீரியல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கடந்த சில வாரமாக சீரியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த பித்தலாட்டம் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதனால் சீரியல் படு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.  ஒரு பக்கம் ராதிகா கோபியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதே போல் பாக்யாவும் கோபியை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டார். விவாகரத்து வாங்குவதற்கு கோர்டுக்கு பாக்யாவும், கோபியும் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும் நீதிபதி விசாரிக்கிறார்.

Exams Daily Mobile App Download

அப்போது  நீதிபதி கேட்ட ஒரு கேள்விக்கு கூட கோபி எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. மேலும் பாக்யாவும்  தன்னை ஏமாற்றி கோபி கையெழுத்து வாங்கினார் என்ற உண்மையை கடைசி வரை கோர்டில் சொல்லாமல், விவாகரத்துக்கு சம்மதம் என்று மட்டும் சொல்கிறார். மேலும் நீதிபதி அவரை சமாதானம் செய்ய பல கேள்விகளை கேட்கிறார். ஆனால் பாக்கியாவின் பேச்சில்  தெளிவு இருப்பது நீதிபதிக்கு புரிகிறது. இருவருக்கும் விவாகரத்து தந்து உத்தரவிடுகிறார். இந்த உத்தரவின் பேரில், சட்டப்படி இனி கோபி – பாக்கியா கணவன் மனைவி இல்லை. மறுபக்கம் ராதிகாவால் தான் குடும்பம் இப்படி ஆகிவிட்டது என்பதால் ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்கு சென்று சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

ராதிகாவை கண்டபடி திட்டிய செழியன், கண்கலங்கிய ராதிகா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!

உன் மீது அவ்வளவு அன்பு வைத்த பாக்கியாவை ஏமாற்ற உனக்கு எப்படி மனம் வந்தது என கேட்கிறார். நீ விஷப்பாம்பு என தெரியாமல் உன்னை என் குடும்பம் நம்பியதால் தற்போது நாசமாகிவிட்டது. என் குடும்பம் அழும் அழுகையை விட நீ 100 மடங்கு அழுவாய் என சொல்லி சாபம் விடுகிறார். இதையடுத்து பாக்கியாவின் தைரியம் கோபிக்கு அதிக கோபத்தை தருகிறது. நேராக போய் சண்டை போடுகிறார். இதையடுத்து அடுத்து என்ன நடக்கும், பாக்கியா அவரது வீட்டில் இருப்பாரா ?அல்லது அவர் தொழில் செய்யும் அலுவலகத்திற்கு செல்வாரா? இது போன்ற பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!