தமிழகத்தில் மீண்டும் அமலாகும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வந்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்பு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய அறிக்கையை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் இன்று வெளியிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள்:

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டன. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று சீன அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தியது. இதன் பலனாக ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு இந்த மாத தொடக்கத்தில் இருந்து விலக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இந்தச் சூழலில் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது மக்களிடையே அதிக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளன. நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் இந்தச் சூழலில், மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் இன்று உத்தரவிட்டுள்ளார். அதாவது, நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

FD கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதங்களில் மாற்றம்! முழு விவரம் இதோ!

வேலூரில் 21 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தியில், முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படுகிறது. மேலும் பொது இடங்களில் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதையடுத்து திருமண மண்டபங்களில் பொதுமக்கள் எண்ணிக்கை 100 நபர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here