தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 14 ( நாளை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை:

தமிழ்நாடு வாணிப கழகத்தின் சார்பில் மொத்தம் 5,300 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. அரசின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு டாஸ்மாக் கடைகளையே சேரும். திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை அமோகமாக இருக்கும். அதனால் தமிழக அரசிற்கு மதுபான கடைகள் மூலமாகவே பெரும்பான்மையான வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் மதுபான கடைகளுக்கு நாளை (ஏப்ரல் 14) விடுமுறை என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை ( ஏப்ரல் 14) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 14.04.2022 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்.

அரசு ஊழியர்களுக்கு இனி வார விடுமுறை கிடையாது – பிரதமர் அதிரடி உத்தரவு!

FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது, தவறினால் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here