புதுமைப்பெண் திட்டத்தில் இன்னும் விண்ணப்பிக்கவில்லையா? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!

0
புதுமைப்பெண் திட்டத்தில் இன்னும் விண்ணப்பிக்கவில்லையா? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
புதுமைப்பெண் திட்டத்தில் இன்னும் விண்ணப்பிக்கவில்லையா? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
புதுமைப்பெண் திட்டத்தில் இன்னும் விண்ணப்பிக்கவில்லையா? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

புதுமைப்பெண்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பை பயின்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இத்திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி இத்திட்டத்தில் முதற்கட்டமாக கல்லூரிகளில் 2,3,4ம் ஆண்டில் பயிலும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என இது தொடர்பான அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் கல்வி மேற்படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.

விவசாயிகளுக்கான சூப்பர் திட்டம் – மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்.. விவரம் உள்ளே!

Follow our Instagram for more Latest Updates

இவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை அணுக 91500 56810, 91500 56809, 91500 56805, 91500 56801 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் கேட்டறியலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!