தமிழகத்தில் நாளை (மே 13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (மே 13) உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (மே 13) உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (மே 13) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில், தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு (மே 13 வெள்ளிக்கிழமை) நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, சிறப்பு பேருந்து, ராட்டினம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் ஆகும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய மற்ற ஒரு நாள் பணி நாளாக அறிவிக்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது.தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் ஏப்ரல் 20ஆம் தேதி கோயிலில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீராடி, அக்னி சட்டி காவடி, பூக்குழி மிதித்தல் ஆயிரம் கண் பானை எடுத்தல், போன்ற வழிகளில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

TN Job “FB  Group” Join Now

இக்கோவிலுக்கு திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது உண்டு. இந்த திருவிழாவின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது இக்கோவிலின் சிறப்பாகும்.ஒவ்வொரு ஆண்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற அங்கப்பிரதட்சணம் செய்வர். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கருதப்படுவதால் கோவில் வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் அக்னிசட்டி எடுத்து வருவதால் தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக 24 மணி நேரமும் தீயணைப்புத் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளை (மே 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை (மே13) தேனி மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மே 13 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. எனவே நாளை(மே 13) மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை பள்ளிகளில் பொதுத் தோ்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. இதை அடுத்து அரசின் அவசர பணிகளில் எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம்,மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வீதம் மே 28ம் தேதி(சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here