இன்று நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – பண்டிகை கொண்டாட தடை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
இன்று நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் - பண்டிகை கொண்டாட தடை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இன்று நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் - பண்டிகை கொண்டாட தடை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இன்று நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் – பண்டிகை கொண்டாட தடை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வன்முறை காரணமாக மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள், இன்று (மே 3) ஈத் பண்டிகை அன்றும் தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு ஊரடங்கு:

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின் போது வகுப்புவாத வன்முறை வெடித்ததன் பேரில் கார்கோனின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் சில வாரங்களுக்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது ஈகைத் திருநாளை முன்னிட்டு மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நகரத்தில் இயல்பு நிலை மெதுவாக திரும்புவதால் பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.

NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!

இருப்பினும் மே 3, செவ்வாய்கிழமையன்று கார்கோன் நகரில் எந்தவிதமான தளர்வுகளும் இருக்காது. பெருநாள் தொழுகைகள் வீட்டிலேயே செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து சமூக மக்களின் சம்மதத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் கார்கோனில் மே 2 அன்று நகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தளர்வு கொடுக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து கர்கோன் மாவட்ட ஆட்சியர் அனுகிரஹா, மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் பிற வேலைகளைச் செய்வதற்கும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில், இன்று (மே 3) ஈகைத் திருநாளை முன்னிட்டு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அந்த வகையில் 300 விரைவு அதிரடிப் படையினர் உட்பட 1,000 கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here