நீங்கள் தொழில் முனைவோராக ரூ.5 கோடி வரை கடனுதவி – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு!!

0
நீங்கள் தொழில் முனைவோராக ரூ.5 கோடி வரை கடனுதவி - மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு!!
நீங்கள் தொழில் முனைவோராக ரூ.5 கோடி வரை கடனுதவி - மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு!!
நீங்கள் தொழில் முனைவோராக ரூ.5 கோடி வரை கடனுதவி – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு!!

தமிழகத்தில் படித்த வேலையில்லா மாற்றுத்திறனாளிகள் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் மூலமாக கடனுதவிகளை பெறலாம். தற்போது இது தொடர்பான அறிவிப்பை விருதுநகர்மாவட்டஆட்சியர் வெளியிட்டுள்ளார்

கடனுதவிகள்:

தமிழகத்தில் வேலையில்லா நிலையை உருவாக்க தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வேலையில்லா படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

எச்சரிக்கை.. சென்னையில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு – மருத்துவ நிபுணர்கள் வார்னிங்!!

Follow our Instagram for more Latest Updates

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும். அத்துடன் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயபடிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். இவர்களுக்கு உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரையிலான கடனுதவி கிடைக்கும். இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சமும், சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சமும் கடனுதவி கிடைக்கும்,

இந்த கடனுதவி பெற விரும்பும் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையத்திற்கு நேரில் சென்று அல்லது 8925534036 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!