தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்!

0
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்!
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்!
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம்!

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜூன் 15 தேதி முதல் கொரோனா நிவாரணத்தொகை ரூபாய் 2,000 மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது .

நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வேலையிழந்து தவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்த தொகை 2 தவணைகளாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. அதில் முதல் தவணை 2000 மே மாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் இம்மாதம் வழங்கப்பட உள்ளது.

LPG சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் கவனத்திற்கு – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!!

திருச்சியில் 15ம் தேதி முதல் கொரோனா நிவாரணத் தொகை தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 1,224 ரேஷன் கடைகள் உள்ளது. அங்கு 8,11,990 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் 11ம் தேதி முதல் 14 ம் தேதி வரை 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் பெயர், குடும்ப அட்டை எண், பொருட்கள் வழங்கப்படும் நேரம் முதலியவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடை வெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here