தமிழக ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர் பாக்கெட் விநியோகம்? அரசு பரிசீலிக்க உத்தரவு!!

0
தமிழக ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர் பாக்கெட் விநியோகம்? அரசு பரிசீலிக்க உத்தரவு!!
தமிழக ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர் பாக்கெட் விநியோகம்? அரசு பரிசீலிக்க உத்தரவு!!
தமிழக ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர் பாக்கெட் விநியோகம்? அரசு பரிசீலிக்க உத்தரவு!!

தமிழக ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர் பாக்கெட்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு இதுகுறித்து பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

கபசுர குடிநீர்:

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை மக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் கொரோனா பாதிப்பை தடுக்கும் பொருட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்தான கபசுர குடிநீர் அனைவரும் குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 16 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

இதை அடுத்து தமிழக ரேஷன் கடைகளில் கபசுர குடிநீர் பாக்கெட்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநெல்வேலியை சேர்ந்த அய்யா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதன்படி அவர் தனது மனுவில் தெரிவித்திருந்ததாவது, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கபசுர குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்து தங்கள் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும், பதிவு செய்யப்பட்ட சித்த மருத்துவர்களை கொண்டு சித்தா சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்த மனு இன்று நீதிபதி பானர்ஜி அவர்கள் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து நீதிபதி தெரிவித்ததாவது, இது மாநில அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது என்றும் கபசுர குடிநீரின் நோய் எதிர்ப்பு திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறி இந்த மனுவை தமிழக அரசு பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!