ஐபோன் மாடல் 14 பயனர்கள் அதிருப்தி – சிம் கார்டு பிரச்னை! ஆப்பிள் நிறுவனம் ஆய்வு!

0
ஐபோன் மாடல் 14 பயனர்கள் அதிருப்தி - சிம் கார்டு பிரச்னை! ஆப்பிள் நிறுவனம் ஆய்வு!
ஐபோன் மாடல் 14 பயனர்கள் அதிருப்தி - சிம் கார்டு பிரச்னை! ஆப்பிள் நிறுவனம் ஆய்வு!
ஐபோன் மாடல் 14 பயனர்கள் அதிருப்தி – சிம் கார்டு பிரச்னை! ஆப்பிள் நிறுவனம் ஆய்வு!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகமான ஐ – போன் மாடல் 14 மொபைலில் சிம் கார்டு பிரச்சனை எழுந்தாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது இது குறித்து ஆப்பிள் நிறுவனம் விசாரிக்க தொடங்கியுள்ளது. மேலும் சில விளக்கங்களையும் அளித்துள்ளது.

ஐ-போன்:

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா எனும் இடத்தை தலைமையிடமாக கொண்டு பிரபல ஐ போன் நிறுவனம் ஆப்பிள் இயங்கி வருகிறது. சர்வதேச சந்தையில் ஆப்பிள் நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. ஆப்பிள் மொபைல்களின் சிறப்பம்சம் என்னவெனில் சிறந்த பாதுகாப்பு வசதிகளை பயனர்களுக்கு அளிக்கிறது. அதனால் பலரும் ஐபோன் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஆப்பிள் நிறுவனமானது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலை அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இது கிராஸ் டிடெக்க்ஷன் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது ஆட்டோமெட்டிக் அம்சத்தையும் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டால் ஐபோன் தானாகவே அவசர உதவிக்கு வைபை மூலம் மற்றவருக்கு தகவல் தெரிவிக்கும்.

தமிழகத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் – மாநகராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ள ஐபோன் – 14 ல் சிம்கார்டு பிரச்சனை இருப்பதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதாவது SIM Not Supported என்ற நோட்டிபிகேஷன் வருவதாவும், செல்லிடப்பேசி செயல்படாமல் நின்றுவிடுவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த புகாரை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் சிக்கல் குறித்து ஆராய்ந்து வருகிறது. அத்துடன் இது ஹார்ட்வேர் பிரச்சனை இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!