Airtel பயனர்களுக்கு இலவசமாக Disney + Hotstar? சூப்பர் திட்டம் அறிமுகம்!

0
Airtel பயனர்களுக்கு இலவசமாக Disney + Hotstar? சூப்பர் திட்டம் அறிமுகம்!
Airtel பயனர்களுக்கு இலவசமாக Disney + Hotstar? சூப்பர் திட்டம் அறிமுகம்!
Airtel பயனர்களுக்கு இலவசமாக Disney + Hotstar? சூப்பர் திட்டம் அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வந்துள்ள பிளான்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் பிளான்:

இந்தியாவில் தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில் மக்கள் அதிக டேட்டா தரும் திட்டங்களை தேர்தெடுத்து ரீசார்ஜ் செய்கின்றனர். இந்த நேரத்தில் கடந்த வருடம் ஜியோ, வோடபோன், விஐ போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை 25% வரை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணம் வசூல் செய்ய கூடிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை தேர்வு செய்ய தொடங்கினர். இந்த கட்டண உயர்வுக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் முன்னணி நிறுவனங்கள் அதிக டேட்டா மற்றும் Disney+ Hotstar போன்றவைகளுக்கு இலவச சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஏர்டெல்லின் ரூ. 499 ரீசார்ஜ் பிளானில் Amazon Prime மற்றும் Disney+ Hotstar சந்தா கிடைக்கிறது இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மொத்தம் 75 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் ஏர்டெல் தேங்க்ஸ், Wynk பிரீமியம் போன்ற நன்மைகளை வழங்குகிறது. அத்துடன் 6 மாத Amazon Prime மெம்பர்ஷிப் மற்றும் 1 வருடத்திற்கு Disney+ Hotstar சந்தா இலவசமாகக் கிடைக்கிறது.அடுத்தாக ஏர்டெல்லின் ரூ.999 ரீசார்ஜ் பிளான் இதில் மொத்தமாக 100 ஜிபி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சலுகைகளை அளிக்கிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் போலி ரேஷன் கார்டுகள்? அரசு நடவடிக்கை!

மேலும் 2 இலவச-ஆட்-ஆன் மற்றும் அமேசான் பிரைம், 1 வருடத்திற்கு Disney+ Hotstar சந்தாவும் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து ரூ.1199 திட்டத்தில் 150 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்,Netflix, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் போன்றவைகளை வழங்குகிறது. மேலும் ரூ.1599 பேக்கில் இலவச ஆட்-ஆன் மற்றும் மேற்கண்ட திட்டங்களில் உள்ள போல அன்லிமிடெட் காலிங் போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. அத்துடன் OTT சந்தா, Wynk பிரீமியம், ஏர்டெல் தேங்க்ஸ் போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் உண்டு.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!