ரயில் பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு – மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை?

0
ரயில் பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு - மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை?
ரயில் பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு - மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை?
ரயில் பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு – மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை?

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை கிடைக்குமா இல்லையா என்பதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ரயில்வே துறை:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி இருந்த காரணத்தால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக தொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. அதில் முக்கிய ஒன்றாக ரயில்வே துறை இருந்தது. அதனை தொடர்ந்து மக்கள் ரயில் பயணம் இல்லாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து வழி போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் மோடி அதிரடி முடிவு?

இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். பொதுவாக நாட்டின் மூத்த குடிமக்கள் ரயில் கட்டணத்தில் 50 முதல் 55 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இச்சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து மூத்த குடிமக்களும் ரயில் கட்டணத்தில் சலுகை எதுவும் இல்லாமல் கூடுதலாக செலவு செய்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளின் போது இந்த வசதியை 2020 மார்ச் மாதத்தில் இந்திய ரயில்வே ஒத்திவைத்தது. அதன் பின்னர் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றுநோய்க்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களின் ரயில் பயணங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2020 மார்ச் 20 முதல் 2021 மார்ச் 31 வரை 1.87 கோடி மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், ஏப்ரல் 1, 2021 முதல் பிப்ரவரி 2022 வரை 4.74 கோடி பேர் பயணம் செய்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். ஆனால் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த விலக்கை மீட்டெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!