‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருணின் உற்சாக நடனத்துடன் களைகட்டிய கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

0
'பாரதி கண்ணம்மா' நடிகர் அருணின் உற்சாக நடனத்துடன் களைகட்டிய கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ!
'பாரதி கண்ணம்மா' நடிகர் அருணின் உற்சாக நடனத்துடன் களைகட்டிய கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ!
‘பாரதி கண்ணம்மா’ நடிகர் அருணின் உற்சாக நடனத்துடன் களைகட்டிய கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியின் முன்னணி சீரியல் இயக்குனரான பிரவீன் பென்னட் மற்றும் நடிகை சாய் பிரமோதிதாவின் 2வது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களின் கொண்டாட்ட வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நட்சத்திர கொண்டாட்டம்

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்து முதன்மையான இடத்தை பிடித்திருக்கும் ஒரு முக்கிய சேனல் என்றால் அது விஜய் டிவி தான். இந்த சேனலின் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் ஒரு கூட்டம் ரசிகர்கள் உண்டு. அதே போல விஜய் டிவி பிரபலங்களுக்கும் எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் சீரியல் நடிகர், நடிகைகள் சமூக வலைதளத்தில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் அல்லது ரீல்ஸ் வீடியோவை பார்ப்பதற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள்.

நடிகர் நகுலின் மனைவி திருநங்கையா? ரசிகரின் மோசமான விமர்சனம்! அவரே அளித்த பதிலடி!

இப்படி இருக்க விஜய் டிவியின் மொத்த சீரியல் பிரபலங்களும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்து அளித்துள்ளது. அதாவது விஜய் டிவியின் ‘கானா காணும் காலங்கள்’, ‘ராஜா ராணி’, ‘பாரதி கண்ணம்மா’ போன்ற முன்னணி சீரியல்களின் இயக்குனரான பிரவீன் பென்னட் வீட்டில் ஒரு விசேஷம் நடந்திருக்கிறது. இயக்குனர் பிரவீன் பென்னட் மற்றும் நடிகை சாய் பிரமோதிதாவின் 2வது குழந்தைக்கு முதலாவது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தளபதி விஜய் – காமெடி நடிகருடன் காரில் பயணம்!

இந்த விழாவிற்கு விஜய் டிவி, கலர்ஸ், சன் போன்ற பிரபல சேனல்களின் சீரியல் நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டம் என கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் பல இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண் பிரசாத் நடிகர் சுகேஷ், தீபக் மற்றும் நம்ம வீட்டு பொண்ணு சீரியல் பிரபலங்களுடன் இணைந்து இந்த பிறந்தநாள் விழாவை ஆடிப் பாடி உற்சாகமாக கொண்டாடி இருக்கிறது. அந்த வகையில் நடிகர் அருணின் இந்த கொண்டாட்ட வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!