நடிகர் விஜய் இந்த சாதியை சேர்ந்தவரா? பகீர் கிளப்பும் வீடியோ!

0
நடிகர் விஜய் இந்த சாதியை சேர்ந்தவரா? பகீர் கிளப்பும் வீடியோ!
நடிகர் விஜய் இந்த சாதியை சேர்ந்தவரா? பகீர் கிளப்பும் வீடியோ!
நடிகர் விஜய் இந்த சாதியை சேர்ந்தவரா? பகீர் கிளப்பும் வீடியோ!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். நல்ல பேரும், புகழும் அவருக்கு இருந்தாலும் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இந்நிலையில் அவர் தந்தை சாதி குறித்து பேசிய வீடியோவை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர்.

நடிகர் விஜய்

தமிழ் திரையுலகில் டாப் நடிகர் என்ற இடத்தில் இருப்பவர் விஜய். அவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பலருக்கு உதவி செய்த நல்ல பெயரும் அவருக்கு உண்டு. ஆனால் சில இடங்களில் அவர் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். தற்போது விஜய்யை வைத்து அவர் அப்பா தற்போது வாதத்தை கிளப்பி உள்ளார். அதாவது சமீபத்தில் சாயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர் தன் வாழ்வில் நடந்த ஒரு விஷயம் பற்றி பேசினார்.

முதன்முதலாக மகனுடன் தோன்றிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரூபாஸ்ரீ – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!

அப்போது தனது மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்க சென்ற போது விண்ணப்ப படிவத்தில் அவரின் சாதி, மதம் ஆகிய இரண்டுமே குறிப்பிட விருப்பம் இல்லாமல் தமிழன் என குறிப்பிட்டதாக தெரிவித்தார். அதை பள்ளி நிர்வாகம் ஏற்காத போது, போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியதும் அமைதியாகி விட்டதாக தெரிவித்தார். இவரின் இந்த வீடியோவை பார்த்த பலர் இவரின் இந்த செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கும் இமான் அண்ணாச்சி – வெளியான தகவல்!!

அதில், முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் இதே பள்ளி கதையை தெரிவித்திருக்கிறார். அதில் சாதி, மதம் ஆகிய இரண்டும் இந்தியன் என குறிப்பிட்டதாக பேசி இருந்தார். அதை வைத்து தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால் விஜய்க்கு ஒரு சாதி இல்லை, இரண்டு சாதியா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த எஸ்.ஏ.சி இப்படி மாத்தி மாத்தி பேசுவதால் எங்க விஜய் அண்ணாவின் மானம் போகுதே என்று தளபதி ரசிகர்கள் சிலர் கவலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!