அவன் – இவன் பட வழக்கில் இயக்குனர் பாலா விடுதலை – நீதிமன்றம் அதிரடி!

0
அவன் - இவன் பட வழக்கில் இயக்குனர் பாலா விடுதலை - நீதிமன்றம் அதிரடி!
அவன் - இவன் பட வழக்கில் இயக்குனர் பாலா விடுதலை - நீதிமன்றம் அதிரடி!
அவன் – இவன் பட வழக்கில் இயக்குனர் பாலா விடுதலை – நீதிமன்றம் அதிரடி!

அவன் – இவன் பட சர்ச்சையில் இயக்குனர் பாலா மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது 10 வருடங்களுக்கு பிறகு வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு இயக்குனர் பாலா விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.

இயக்குனர் பாலா:

2011-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் – இவன். வித்தியாசமான கதைக்களம் மற்றும் நடிப்பினால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் பிரசித்தி பெற்ற சொரிமுத்தையனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக படம் வெளியான சமயத்தில் சர்ச்சைகள் எழுந்தது.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி – வாடிக்கையாளர்கள் விபரங்கள் சேகரிப்பு தீவிரம்!

அதனை தொடர்ந்து சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன் தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி அகோரம், இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். தயாரிப்பு நிறுவனம் ஜமீன் குடும்பத்துடன் சமாதானமான நிலையில் இயக்குனர் பாலா மற்றும் நடிகர் ஆர்யா மீது வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்த நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

TN Job “FB  Group” Join Now

கடந்த 2 வழக்குகளுக்கு நேரில் ஆகாரகத இயக்குனர் பாலா இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று காலை 10.30 மணிக்கு விசரணைக்கு நேரில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்ந்த சங்கர ஆத்மஜன் நேரில் ஆஜராகி குற்றத்தை சரியாக நிரூபிக்கவில்லை. இந்த காரணத்தால் இயக்குனர் பாலா வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளார். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு தற்போது முடிவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!