தமிழகத்தில் வேளாண் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை – இன்று முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் வேளாண் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை - இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் வேளாண் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை - இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் வேளாண் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கை – இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் (02.10.2021) துவங்குகிறது. இதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பரவலால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஜூலை மாதம் முதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகளும் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. மற்ற கல்லூரிகளை தொடந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும் 2021 – 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பல்கலையின் கீழ் உள்ள நான்கு உறுப்பு கல்வி நிலையங்கள் மற்றும் மூன்று அரசு மற்றும் 10 தனியார் இணைப்பு கல்வி நிலையங்களில் பட்டயப்படிப்பு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நாளை (அக்.3) 4வது மெகா முகாம்!

தற்போது பட்டய படிப்பிற்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் புதிதாக தொடங்கப்பட்ட வேளாண் பொறியியல் பட்டயப்படிப்புக்கு குமுளூர் உறுப்பு கல்வி நிலையத்தில் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு தோட்டக்கலை துறையால், தளி, மாதவரம் மற்றும் ரெட்டியார்சத்திரம் மையங்களில் தோட்டக்கலை பட்டயப்படிப்பு நடத்தப்பட்டு வந்தது. நடப்பாண்டு முதல் வேளாண் பல்கலையின் இணைப்பு கல்வி நிலையங்களாக அங்கீகாரம் பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!

இணையதளத்தில் உள்ள கையேட்டை பதிவிறக்கம் செய்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லது 0422- 6611322 / 6611328 / 6611345 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம். வேளாண் பட்டய படிப்புகளில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://tnau.ac.in/diplomaadmission வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here