இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் டிஜிட்டல் ரூபாய் சோதனை – மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

0
இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் டிஜிட்டல் ரூபாய் சோதனை - மத்திய வங்கி ஆளுநர் தகவல்!
இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் டிஜிட்டல் ரூபாய் சோதனை - மத்திய வங்கி ஆளுநர் தகவல்!
இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் டிஜிட்டல் ரூபாய் சோதனை – மத்திய வங்கி ஆளுநர் தகவல்!

உலகளாவிய டிஜிட்டல் நாணய சோதனை திட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது வரும் டிசம்பர் மாதத்திற்குள் முதல் முதலாக தொடங்கலாம் என மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார்.

டிஜிட்டல் ரூபாய்

டிஜிட்டல் மயமாக்கலின் ஒரு பகுதியான டிஜிட்டல் நாணயங்கள் தொடர்புடைய சோதனைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் துவங்கும் என மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதாவது உலக நாடுகளை சேர்ந்த சீனா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மத்திய வங்கிகள், டிஜிட்டல் நாணயங்களை வணிக கடன் வழங்குபவர்களுக்கு அல்லது பொதுமக்களுக்கு நேரடியாக வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.

செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில் தடுப்பூசி – தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

அந்த வகையில் CBDC என்று அழைக்கப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள், டிஜிட்டல் வடிவத்தில் சட்டப்பூர்வ டெண்டர் என்று அழைக்கப்படும் ஃபியட் நாணயங்களின் ஆன்லைன் பதிப்பாகும். இந்தியாவை பொருத்தளவு இவை டிஜிட்டல் ரூபாயாக இருக்கும். இது குறித்து கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘உலகளாவிய ரீதியில் இது முற்றிலும் புதிய தயாரிப்பு என்பதால் நாங்கள் அதைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கிறோம்.

தற்போது ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் நாணயத்தின் பாதுகாப்பு, இந்தியாவின் நிதித்துறை மீதான தாக்கம் மற்றும் பணவியல் கொள்கை, புழக்கத்தில் உள்ள நாணயம் ஆகியவற்றை இது எவ்வாறு பாதிக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகிறது’ என தெரிவித்துள்ளார். இதனிடையே மத்திய வங்கிகளின் பண பயன்பாடு குறைந்திருக்கும் சூழலில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்ஸிகளில் அதிகரித்து வரும் ஆர்வத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் டிஜிட்டல் நாணயங்களை உருவாக்கும் முயற்சிகளில் RBI ஈடுபட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

உலகளாவிய இந்த செயல்பாடுகளில் சீனாவை சேர்ந்த மக்கள் வங்கி முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து முறையே டிஜிட்டல் யூரோ மற்றும் CBDC ஆகியவற்றை கவனித்து வருகிறது. இந்த CBDCகள் கிரிப்டோ கரன்ஸிகளிலிருந்து பல முக்கிய வழிகளில் வேறுபடுகின்றன. முதலில், அவை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு ஒரு மத்திய அதிகாரத்தின் கீழ் அதாவது மத்திய வங்கிகளின் கீழ் வருகிறது. அடுத்தாக இவை ஃபியட்களை போல செயல்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!