இனி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் டிஜிட்டல் பாடம் – பிரதமர் அறிவிப்பு!

0
இனி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் டிஜிட்டல் பாடம் - பிரதமர் அறிவிப்பு!
இனி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் டிஜிட்டல் பாடம் - பிரதமர் அறிவிப்பு!
இனி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் டிஜிட்டல் பாடம் – பிரதமர் அறிவிப்பு!

ஹிமாச்சல பிரதேசத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் அவர்கள் ஆசிரியர்கள் கல்வியில் ‘டிஜிட்டல்’ பாடத்தை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல்:

இன்றைய கால கட்டத்தில் தொழில் நுட்பம் எதிர்பாராத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் ஏனைய பணிகளை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே செய்தனர். மற்ற வேலைகளை தாண்டி கல்வி கற்பது கூட ஆன்லைன் மயமாகி விட்டது. தொற்று அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் நேரடி வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஸ்மார்ட்போன் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்று வந்தனர். இந்த ஆன்லைன் கல்விக்கு முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

எப்போதும் ஒரு திட்டம் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் அதற்கு முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இனி வரும் காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் முறையில் தான் நடைபெறும். இந்த நிலையில் ஆசிரியர்கள் கல்வியில் ‘டிஜிட்டல்’ பாடத்தை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.

டெபிட் & கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அமல்! முழுசா தெரிஞ்சுக்கோங்க!

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார் அப்போது பேசிய அவர் ஆசிரியர் பயிற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பம், மொபைல் செயலிகள் பயன்பாடு ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். ஆசிரியர் பயிற்சிக்கு என, தனி ‘டிவி’ சேனல் துவக்கப்பட வேண்டும். அத்துடன், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை, ஆசிரியர் பயிற்சியில் ஈடுபடுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை ஆகியவை குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றது. மேலும் மாநாட்டில் நாடு முழுவதும் சீரான வளர்ச்சி பெறும் நோக்கில், ‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்’ திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here